நம்பினோம் நம்பினோம்

கூட்டமாக கூடினோம்
ஆட்டமாக ஆடினோம்
நாளை நமக்கானவன் என்றும்

நம்பினோம்…. நம்பினோம்

மேலாடை இல்லாமலும்
முகம் சிதைந்தபடியும்
மூச்சு திணறியும்
முதுகு உடைந்தும் அடங்கியது ஆட்டம்
பார்க்க வந்தவன் பறந்து சென்றான்
கூட வந்தவன் தலைமறைவாகிவிட்டான்

நம்பினோம்…நம்பினோம்

கண் தெரியாத தாய் மகனுக்காகவும்
குடும்பத்தை இழந்து கணவனும்
பிள்ளைகளை இழந்த பெற்றோர்களும் பரிதவிக்கிறார்கள் நிலமெங்கும்
நாம் ஆர்பரிக்கும் குரல் தேவை நம் அழுகுரல் தேவை இல்லை என்று புறமுதுகிட்டு ஓடியவனை

நம்பினோம்… நம்பினோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *