நம்பினோம் நம்பினோம்
கூட்டமாக கூடினோம்ஆட்டமாக ஆடினோம்நாளை நமக்கானவன் என்றும் நம்பினோம்…. நம்பினோம் மேலாடை இல்லாமலும்முகம் சிதைந்தபடியும்மூச்சு திணறியும்முதுகு உடைந்தும் அடங்கியது ஆட்டம்பார்க்க வந்தவன் பறந்து சென்றான்கூட வந்தவன் தலைமறைவாகிவிட்டான் நம்பினோம்…நம்பினோம் கண் தெரியாத தாய் மகனுக்காகவும்குடும்பத்தை இழந்து கணவனும்பிள்ளைகளை இழந்த பெற்றோர்களும் பரிதவிக்கிறார்கள் நிலமெங்கும்நாம் ஆர்பரிக்கும் குரல் தேவை நம் அழுகுரல் தேவை இல்லை என்று புறமுதுகிட்டு ஓடியவனை நம்பினோம்… நம்பினோம்
